சீனாவில் நிலக்கரி சுரங்கம் வெடிப்பு! 5 பேர் பலி!

சீனாவில் நிலக்கரி சுரங்கம் வெடிப்பு! 5 பேர் பலி!

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் கிஜியாங் மாகாணத்திலுள்ள ஸிஹாவோ நகரத்தில் லியான்போ என்ற நிலக்கரிச் சுரங்கமொன்றில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக சோங்கிங் சக்தி முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லியான்போ சுரங்கமானது, வெடிப்புக்கு உட்படும் முன்னரே அச்சுரங்கவாயிலை பணியாளர்கள் மூடியுள்ளனர்.

அடைக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒருவிதமான வாயு காரணமாகவே குறித்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெடிப்பிற்குள்ளான சுரங்கத்தைச் சூழவுள்ள குடியிருப்புக்கள், கட்டிடங்கள் அனைத்தினதும் ஜன்னல், கதவுக்கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காயமடைந்த நால்வரில் ஒருவர், குறித்த வாயிலிலிருந்து தான் 12 மீற்றர் தூரம் தொலைவில் இருந்ததாகவும் எனினும்,தான் பலமாகத் தாக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடிப்பில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net