பிரான்ஸ் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் தொகை 13ஆக அதிகரிப்பு!

பிரான்ஸ் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் தொகை 13ஆக அதிகரிப்பு!

பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குறித்த வெள்ளப்பெருக்கானது, 13 உயிர்களைக் காவுவாங்கியுள்ளதோடு இன்னும் ஒருவர் காணாமற்போயுள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) மாலை உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பிரதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கபட்டுள்ளதாக தேசிய அவசர சேவைகள் பிரிவின் பேச்சாளர் மைக்கல் பார்னியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆற்றுநீர் பெருக்கெடுத்தும் சேற்றுடனான நீர் மட்டம் அதிகரித்து பாய்ந்தோடுவதால், அப்பகுதியிலுள்ள பெரும்பாலான மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீதியில் சென்ற வாகனங்கள் எல்லாம் நீருடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மேலும், நேற்று மாலையிலிருந்து குறித்த பிராந்தியம் அனர்த்த வலயமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் 350இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் பணியிலீடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் எடோவர்ட் ஃபிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த வெள்ள மட்டமானது, கடந்த 1891ஆம் ஆண்டு இறுதியாக பிரான்ஸ் முகங்கொடுத்த வெள்ள அனர்த்தத்தை ஒத்ததென விஜிகுருவஸ் முகவரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net