‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்!

‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்!

மீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற நிலையில், சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி, அமிதாப்பச்சன் மீது குறை சொல்லியிருக்கிறார்.

மீ டூ இயக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்ற பாலியல் புகாரில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலர் தங்களுடைய பெயர்களும் மீடூ-வில் வெளியாகுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மீ டூ வில் சிக்கி உள்ளார்.

சிகை அலங்கார நிபுணராக இருக்கும் சப்னா மோடி பவனானி தனது டுவிட்டரில் அமிதாப்பச்சன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சப்னா மோடி பவனானி தனது டுவிட்டரில் பக்கத்தில் ‘நீங்கள் நடித்த பிங்கி படம் வெளியாகி உங்களுக்கு நல்ல பெயர் பெற்று தந்து இருக்கலாம். அதில் உங்களுடைய சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

உண்மை கண்டிப்பாக வெளியே வரத்தான் செய்யும். இப்போது நீங்கள் உங்களது கையை கடிக்க தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கின்றேன்.

அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும். என்று சப்னா மோடி பவனானி இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் இரு தினங்களுக்கு முன்பு பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கண்டித்தும், மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தனது டுவிட்டரில் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டு இருந்த நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு இந்தி திரைப்பட உலகில் பரபரப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net