யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் யுவதி கடத்தல்!

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் யுவதி கடத்தல்!

யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) பட்டப்பகலில் முச்சக்கரவண்டியில் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலிச்சந்தி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பிலும் மேலும் தெரியவருவதாவது, செம்மணி வெளிப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிற்குள் இருந்து பெண்ணின் அவலக் குரல் கேட்பதை அவதானித்த பொதுமகன் ஒருவர், குறித்த முச்சக்கரவண்டியை துரத்திச் சென்றுள்ளார்.

செம்மணியில் இருந்து ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்தியை கடந்து யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் வளாகம் வரை துரத்திச் செல்லப்பட்ட நிலையில் யுவதியின் ஆடையைக் களைந்து, துரத்தி சென்றவரது முகத்தில் எறிந்துவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net