சனத் ஜயசூரியவிற்கு 14 நாட்கள் காலக்கெடு!

சனத் ஜயசூரியவிற்கு 14 நாட்கள் காலக்கெடு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இரண்டு சரத்துக்களை மீறியமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு சபையின் விசாரணைகளுக்காக ஆதரவளிக்காமை அல்லது மறுப்பு தெரிவித்தமை மற்றும் விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்தியமை அல்லது விசாரணைகளை காலத்தாமதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜயசூரிய விளக்கமளிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1992 Mukadu · All rights reserved · designed by Speed IT net