புத்தளத்தில் விபத்து! ஒருவர் பலி! ஐவர் படுகாயம்!

புத்தளத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்!

புத்தளம் – 18ஆவது கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான ஜுப் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாந்தமையினாலேயே நேற்றிரவு(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 7906 Mukadu · All rights reserved · designed by Speed IT net