ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்தில் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிந்த இந்த சடலம் நேற்றிரவு 10.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இச் சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார், இதுவரையிலும் சடலம் இணங்கான படவில்லை என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் சடலம் பிரேத பரிசோதணைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 9983 Mukadu · All rights reserved · designed by Speed IT net