திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால் உதவி!

திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால் உதவி!

லைக்கா நிறுவனத்தின் அனுசணையோடு திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிசாரால் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது, குறித்த நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி பகுதியில் உள்ள வறிய குடும்பங்களில் இருந்து கல்வியை தொடரும் மாணவர்களிற்கு குறித்த முதல் கட்ட உதவிகள் இன்று பொலிசாரால் வழங்கி வைக்கப்பட்டது,

இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலை க்கு வருகை தந்த பொலிஸ் உயரதிகாரிகளை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேந்திர கருணாரட்ண, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது 10 மாணவர்களிற்கு பாடசாலை சீருடை வழங்கி வைக்கப்பட்டதுடன், 25 மாணவர்களிற்கு 2000 ரூபா வைப்பில் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தகமும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த 25 மாணவர்களின் கல்வி காலம் முடியும்வரை மாதாந்தம் கற்றல் செலவுகளிற்காக 1000 ரூபா வைப்பிலிட உள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தம் நோக்குடன் பொலிசார் இவ்வாறான சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

a

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net