உலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் இலங்கையில் தரையிறங்கியது!

உலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் இலங்கையில் தரையிறங்கியது!

உலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான An-124 விமானம், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) தரையிறங்கியுள்ளது.

சவூதி அரேபிய இளவரசர் சுல்தான் விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் இந்தோனேசியாவிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில், மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

1982 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி விமானமாக An-124 கருதப்படுகின்றது.

குறித்த விமானம் இலங்கையில் தரையிறங்கும் போது அதில் 19 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

கடந்த யூலை மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் இந்த விமானம் இலங்கைக்கு வருவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

இந்த விமானம், கனரக அல்லது பருமனான சரக்குகள் மற்றும் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் துருப்புக்களுடன் குறிப்பாக நீண்ட தூர பிரயாணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விமானம் இன்று அதிகாலை 3:27 மணியளவில் இந்தோனேசியா நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6117 Mukadu · All rights reserved · designed by Speed IT net