கொழும்பில் 13 மில்லியன் ரூபாய் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பில் 1100 கிலோகிராம் போதைப்பொருளை உடைமையில் வைர்த்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் போதே இவர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டவர் பாதுக்க பகுதியை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 13 மில்லியன் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பொரளை பகுதியில் 7 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 38 வயதுடைய பொரளை பகுதியை சேர்ந்த எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.