மரண தண்டனை கைதி ஒருவரின் உதவியாளர் அதிரடியாக கைது!

மரண தண்டனை கைதி ஒருவரின் உதவியாளர் அதிரடியாக கைது!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் என கருதப்படும் ஹைபுட் சுத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பாதுக்க – அங்கம்பிட்டி, நெட்டிஒலுவ பகுதி யில் வாடகை வீடொன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடவியல் அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், 37 வயதான சமீர ரசாங்க குணசேகர ஹைப்ரிட் சுதா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் ஹெரோயின் மற்றும் 750,000 ரூபாய் பணம் மற்றும் 2 மோட்டார் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயி போதைப்பொருளின் பெறுமதி 13 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் என இனங்காணப்பட்டுள்ளார்.

மேலும் 2015.07.31 புளூமெண்டால் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் சூட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Copyright © 5066 Mukadu · All rights reserved · designed by Speed IT net