வெளிநாடு ஒன்றில் இலங்கையர்கள் மோதல்! ஒருவர் ஆபத்தான நிலையில்!
மத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கையர்கள் மோதிக் கொண்டமையால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டுபாயில் இலங்கையரை கத்தியால் குத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் மற்றுமொரு இலங்கையரை கத்தியால் குத்தியுள்ளார் என டுபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 வயதான இலங்கையர் Umm Suqeim பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதி முழுவதும் இரத்த கறை காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், காயமடைந்த இலங்கையரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த நபரின் வலது நெஞ்சு பகுதியில் பாரிய காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுக் வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி விசாரணைக்குப் பின்னர், குற்றத்தை ஒப்புக் கொண்ட சந்தேக நபரை டுபாய் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.