அதிகாரப் பகிர்வே அபிவிருத்தியை அர்த்தப்படுத்தும்!

அதிகாரப் பகிர்வே அபிவிருத்தியை அர்த்தப்படுத்தும்!

இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் முழுமையாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அதன் மூலமே அபிவிருத்தியின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

“இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அவ்வாறு பகிர்ந்தளித்தால் மாத்திரமே உண்மையான அபிவிருத்தியின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும்.

அவ்வாறு அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் மோதல் ஏற்பட வாய்ப்பிருக்காது. அதுமாத்திரமன்றி கிராமப்புறங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net