உலகமயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச்சூடு!

உலகமயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச்சூடு!

உலகமயமாக்கலின் விளைவே கிரைமிய கல்லூரி தாக்குதலென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் சமூக மாற்றங்கள் தொடர்பாக அன்றாடம் தெரியவருகின்றதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புட்டின், குறிப்பாக அமெரிக்காவில் பாடசாலைகளிலேயே இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஆரம்பித்துவிடுகின்றன என சுட்டிக்காட்டினார்.

கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியான கல்லூரி மாணவன் உள்ளடங்களாக 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளடங்குகின்றனர்.

18 வயதான குறித்த மாணவன், அக்கல்லூரியில் 4ஆம் வருடத்தில் கல்விபயின்று வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், மாணவனின் மரண விசாணையில் அவரது மனநிலை குறித்து ஆராயவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கல்லூரி அதிபர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net