செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு! இருவர் பலி!

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு! இருவர் பலி!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடி விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அதன் மீட்பு பணிகளும் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த இருவரின் உடல்களும் இடிபாடுகளின் கீழ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் காயமடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த வெடி விபத்து ஏற்பட்ட போது அதில் 5 பேர் மட்டுமே பணி புரிந்ததாக ரஷ்ய அவசர அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஒரு குழந்தை உட்பட 3 பேர் இன்னும் அந்த இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Copyright © 8703 Mukadu · All rights reserved · designed by Speed IT net