எரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல!
எரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படாத வகையிலும் விலைகளை நிர்ணயிக்கும் முறையை உருவாக்குவது போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரம் மக்களை ஏமாற்றுவதற்காக காண்பிக்கப்பட்ட ஒன்று என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.