வவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவகுமார் அனோசன் என்ற 14 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வைரவ மூன்று முறிப்பு குளத்திற்கு சென்ற போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமானார்.
கூக்குரல் கேட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்தவர்களால் காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.
குளத்திலிருந்து எடுக்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.