வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு!

வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு!

வேலூர் பெண்கள் சிறை வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்தித்துக் கொண்டனர்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி-முருகன் நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) பெண்கள் சிறை வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினியும் முருகனும் சந்தித்துக் கொண்டனர்.

ஆண்கள் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை பொலிசார் அழைத்துச் சென்றனர்.

சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Copyright © 5978 Mukadu · All rights reserved · designed by Speed IT net