சிறுபான்மையினரை காக்க யுத்தம் செய்த கோத்தபாய!
சிறுபான்மையினர் தனக்கு எதிராக செயற்பட எவ்வித நியாயமும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருவது தொடர்பில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் சிறுபான்மையினரைக் காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்ததாகவும், அவர்களுக்கு எதிராக அல்ல எனவும் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவிததுள்ளார்.