மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!
மட்டக்களப்பு 16ஆம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 16ஆம் கிராமத்தை சேர்ந்த மதுரைநாதன் என்ற குடும்பஸ்தரே நேற்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.