கொலம்பியாவில் நிலச்சரிவு ! 9 பேர் பலி!
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கொலம்பியாவிலுள்ள மலைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் மண்ணினுள் புதையுண்டுள்ளன.
குறித்த அனர்த்தத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகத்தாழ்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்டு சீவியம் நடாத்தும் குறித்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் வாழும் பரன்கபேமெஜா நகரில் தொடர்ச்சியான அடைமழை காரணமாகவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெற்றோலியம் விளையும் குறித்த பகுதியில் இவ்வாறான நிலச்சரிவு அனர்த்தங்கள் சாதாரணமாக அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.