சீனாவின் நிலக்கரிச்சுரங்க வெடிப்பு! – இருவர் மீட்பு!

சீனாவின் நிலக்கரிச்சுரங்க வெடிப்பு! – இருவர் மீட்பு!

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷங்டொங்கில் ஏற்பட்ட பாறை வெடிப்பு காரணமாக நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்ட 20 சுரங்கத் தொழிலாளர்களில் இருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளன.

நிலக்கரிச்சுரங்கத்தின் ஊடாகச் செல்லும் கழிவு நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுரங்கத்தின் பாறைகள் வெடிப்புக்குட்பட்டு, நேற்று சுரங்கப்பணியாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் வெளியேற வழியின்றி சுரங்கத்தினுள் சிக்குண்டுள்ளனர்.

சிக்குண்ட பணியாளர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பாறை வெடிப்புக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அப்பகுதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net