“பாதை மாறி பயணிக்கும் அரசாங்கம்”
தேசிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறமுடியாவிட்டாலும் கூட, அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்றே கருதுகின்றேன்.
அதனால் தனியொரு கட்சி, ஆட்சி அதிகாரம் என்பவற்றைக் கடந்து நாட்டின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்காலம் தொடர்பிலுமே கவலை கொண்டுள்ளேன் என வெளிவிகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் பயணிக்கலாம் என்பதே கட்சியிலுள்ள பெரும்பான்மையானோரின் அபிப்பிராயமாக உள்ளது.
எனவே பெரும்பான்மையானோரின் கருத்துடன் நானும் உடன்படுவதனையே விரும்புகின்றேன்.
ஆனால் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் மீள்பரிசீலனை மேற்கொள்வார்களாயின் என்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவிப்பேன்.