விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஐஸ்லாண்ட்எயார் விமானம் (Icelandair) ஒன்றின் விமானி அறைக் கண்ணாடி யன்னல் உடைந்து சிதறியதை அடுத்து அந்த விமானம் கனடாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானியின் இடது பக்கத்திலிருந்த கண்ணாடி யன்னல் உடைந்ததாக அவர் அறிவித்ததைப் பயணி ஒருவர் Twitter பக்கத்தில் பதிவுசெய்தார்.

இந்த சம்பவத்தால் விமானத்திலிருந்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என விமான நிலையத்தின் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

தமது 688 இலக்க விமானம் திடீர் தொழினுட்ப பிரச்சினை காரணமாக க்யூபெக், பொகொட்வில்லே, விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யன்னலின் வெடிப்பு 20 சென்டிமீட்டர் நீளம் இருந்ததாக கூறப்படுகிறது.

விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த போது 155 பயணிகளையும் 7 ஊழியர்களையும் ஏற்றிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0680 Mukadu · All rights reserved · designed by Speed IT net