இலங்கை வந்துள்ள பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை வந்துள்ள பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரிஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தூதரகம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மது அருந்த வேண்டாம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு, இலங்கையிலுள்ள, இங்கிலாந்து உயர்ஸ்தானிகரத்தினால் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாளை போய தினம் என்பதனால் மது அருந்துவதனை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்றையதினம் நடைபெறும் போட்டியின் போது மழை குறுக்கிட்டால், இந்தப் போட்டி நாளை நடைபெறும். எனவே புனித நாளாக கருதப்படுகின்ற போயா தினம் நாளை என்பதனால் மது பானம் அருந்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மது அருந்தினால் பொலிஸாரினால் கைது செய்யப்படும் அளவு குற்ற செயலாகும் என்பதனால் பிரித்தானியர்கள் மது அருந்துவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Copyright © 1473 Mukadu · All rights reserved · designed by Speed IT net