திடீரென படையெடுத்த பெருந்தொகை நாகப் பாம்புகள்! பதற்றமடைந்த பிரதேச மக்கள்!
ஹம்பாந்தோட்டையில் ஒரு பகுதியில் பெருந்தொகை நாகப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
திஸ்ஸமஹாராம பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள பற்றைக்குள் இருந்து பல நாகப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
சிறிய பற்றைக்குள் 43 நாகப்பாம்பு குட்டிகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பாம்புகள் புந்தல தேசிய பூங்காவில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் பெருந்தொகையான பாம்புகள் மீட்கப்பட்டமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.