மெக்சிகோவில் சூறாவளி! 11 பேர் பலி!

மெக்சிகோவில் சூறாவளி! 11 பேர் பலி!

மெக்சிகோவில் ஏற்பட்ட வெப்பவலய சூறாவளியில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பசுபிக் சமுத்திரத்திற்கு அருகிலுள்ள தெற்கு மெக்சிகோவின் ஒக்ஷாகோ மாநிலத்தில் நேற்று முனதினம் (ஞாயிற்றுக்கிழமை) விசன்டே சூறாவளி ஏற்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசன்டே சூறாவளியானது அடைமழையையும் இணைத்துக் கொண்டு வந்தமையினால் வெலி வெசினல் ஆறு பெருக்கெடுத்து அபாயமட்டத்தைக் கடந்தமையினால் அணை திறக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சூறாவளி, அதை தொடர்ந்து உருவான பாய்ந்தோடிய பாரிய வெள்ளம் என்பவற்றால் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், இராணுவ வீரர்களின் உதவியுடன் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சூறாவளியானது, மணித்தியாலத்திற்கு 45 மைல் வேகத்தில் விசியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இன்று தென்மேற்கு கரையோரப்பகுதியில் தாக்கும் வாய்ப்புக்களுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Copyright © 5541 Mukadu · All rights reserved · designed by Speed IT net