துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!
வீரகெட்டிய, மக்குனதெனிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிக் சூட்டு சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹக்குறுவெல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.