பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் – ரஜினி மோதல்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் – ரஜினி மோதல்?

2018ம் ஆண்டு தீபாவளி விஜய், அஜித், சூர்யா ஆகியோர் இடையிலான மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அஜித், சூர்யா ஆகியோர் விலகிக் கொண்டார்கள். விஜய் மட்டுமே ‘சர்கார்’ படம் மூலம் வருகிறார்.

தீபாவளிக்கு அடுத்து பொங்கல் பண்டிகைதான் அனைவரும் எதிர்பார்க்கும் பட வெளியீட்டு நாள். அடுத்த வருடப் பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ படம் வெளியாகும் என்று அப்படத்தின் ஒளிப்பதிவாளர் மூலம் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அதே தினத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படமும் வெளியாகும் என்று தெரிகிறது.

பொங்கல் தினத்தில் இரு பெரும் வசூல் நடிகர்களான ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படங்கள் போட்டி போடுவது சரியாக இருக்காது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தியட்டர்கள் கிடைப்பதில் இதனால் சிக்கல் ஏற்படும். ஒரு விசேஷ தினத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் வருவது தான் சரி என்றும் கோலிவூட்டில் சொல்கிறார்கள். இந்த ரஜினி, அஜித் போட்டியில் யாராவது விலகுவார்களா என்பதும் சந்தேகம்தான்.

Copyright © 0000 Mukadu · All rights reserved · designed by Speed IT net