மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்!
மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளராகவும், நிதி அமைச்சின் உதவி செயலாளராகவும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் குழு உறுப்பினராகவும் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இவர் இதற்கு முன்னர் செயற்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பளம் மற்றும் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
இதேவேளை, வங்கியின் பணிப்பாளர் சபை (திங்கட்கிழமை) மாலை கலைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.