யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக யுவனிதா நாதன்!

யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக யுவனிதா நாதன்!

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தமிழ் கனேடியப் பெண்மணி என்ற பெருமைக்குரிய யுவனிதா நாதன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வென்றுள்ளார்.

யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக யுவனிதா நாதன், பகுதி 4 – தொகுதி 7 மற்றும் 8 இல் போட்டியிட்டு 6,747 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

மேலும் அவருடன் போட்டியிட்ட ஜென்னி சென் 5,572 வாக்குகளையும், கவிதா செந்தில் 1,103 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net