அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மறு பரிசீலனை செய்வேன்!
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்வை வழங்காவிடில் நான் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் மறு பரிசீலனை செய்வேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.