அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டு விவகாரம்! அறிக்கை தயார்!
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அறிக்கையின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமுலிலுள்ள சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.