சிஎன்என் அலுவலகத்திற்கும் மர்மப் பொதி – அமெரிக்காவில் அச்சநிலை!

சிஎன்என் அலுவலகத்திற்கும் மர்மப் பொதி – அமெரிக்காவில் அச்சநிலை!

அமெரிக்காவில் சிஎன்என் அலுவலகத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு இனந்தெரியாத நபர்கள் வெடிகுண்டுகள் அடங்கிய பொதிகளை அனுப்பிவைத்துள்ளதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையிலேயே மர்ம பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

நியுயோர்க்கின் டைம்வோர்னர் நிலையத்தில் உள்ள சிஎன்என் அலுவலகத்திற்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதி அனுப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த அலுவலகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிஐஏயின் முன்னாள் இயக்குநர் ஜோன் பிரெனின் பெயருக்கே குறிப்பிட்ட பொதி அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஒபாமா ஹிலாரி ஆகியோரிற்கு அனுப்பப்பட்ட பொதியில் காணப்பட்ட அதேபொருளே சிஎன்என் அலுவலகத்திற்கு வந்த பொதியிலும் காணப்பட்டது என அதிகாரியொருவர் தெரிவித்தள்ளார்

Copyright © 4810 Mukadu · All rights reserved · designed by Speed IT net