சிறுமியை கர்ப்பமாக்கிய சிறிய தந்தை கைது!
16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய விடயம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கிணங்க பொலிஸார், குறித்த சிறுமியை அணுகி அவரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதன் பின்னரே சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக மொனராகலை வைத்திய சாலையில் அனுமதித்த பின்னர் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாகவுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மொனராகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.