பதுளையில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்பு!
அதி சக்தி வாய்ந்த கைக்குண்டொன்றினை பதுளைப் பொலிசார் இன்று பதுளைப் பகுதியின் நாராங்கலை என்ற இடத்திலிருந்து மீட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் நாராங்கலை என்ற இடத்தில் கைவிடப்பட்ட வீட்டுத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குண்டுகளை செயலிழக்கும் தியத்தலாவை இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட கைக்குண்டு செயலிழக்கப்பட்டது.
இது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாவிட்டாலும் சம்பவம் தொடர்பான தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.