புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் விசேட அறிவிப்பு!
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.