விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்!

உயிரிழந்த உறவினரின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இவருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தம்புளை கெக்ரிவா பகுதியின் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வேன் ஒன்றும் சிறிய லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பெண் மற்றும் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் 4 மற்றும் 6 வயதுடைய சிறியவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் பயணித்தவர்களே உயிரிழந்த நிலையில், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் கட்டாரில் பணி செய்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை பெறுவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 6266 Mukadu · All rights reserved · designed by Speed IT net