எமது கட்சி பிளவுபடுவதற்கு ஒருபோதும் சாத்தியமில்லை!
எமது ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சுதந்திரமாக செயற்படுகின்ற உரிமை காணப்படுகின்றமையால் அது ஒருபோதும் பிளவுபடாதென, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை- கொஸ்கொட பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எமது கட்சியிலுள்ள அனைவரும் சுதந்திரமாக செயற்படுவதற்கும் சுதந்திரமாக கருத்தினை வெளிப்படுவதற்கும் உரிமை காணப்படுகின்றதெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர்களால் சிறந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது வேண்டிய ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றோமெனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் எமது கட்சியில் ஒருபோதும் பிளவு ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.