சம்பந்தனின் பதவிக்கு ஆபத்து?

சம்பந்தனின் பதவிக்கு ஆபத்து?

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில் சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரைநாளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தமது எதிர்க்கட்சி அந்தஸ்த்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது அவதானிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது பதவியை துறக்க நேரிடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Copyright © 8214 Mukadu · All rights reserved · designed by Speed IT net