பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது!

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட முகாமையாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

தொழில்நுட்பத் துறை மற்றும் தேடுபொறி துறையில் கூகுளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான் சுந்தர் பிச்சை எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்த போதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 மில்லியன் டொலர்களை இறுதி கொடுப்பனவாக அண்ட்ராய்ட் இயங்குதளத்தை உருவாக்கியவரான அன்டி ரூபின் பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரைக்கு பதிலுரையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ரூபினின் சார்பாக அவர் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் மேற்கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், துணிகர முதலீட்டாளர் நிறுவனம் மற்றும் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப காப்பகம் என்பவற்றை நிறுவுவதற்கான நோக்கில் ரூபின் கடந்த 2014 ஆம் ஆண்டே கூகுளை விட்டு வௌியேறுவதற்கு தீர்மானித்ததாக பேச்சாளர் சேம் சிங்கர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net