புதிதாகப் பிறந்த அரியவகை வெள்ளைப் புலிக் குட்டிகள்!

புதிதாகப் பிறந்த அரியவகை வெள்ளைப் புலிக் குட்டிகள்!

கிரீமியாவில் புதிதாகப் பிறந்த வெள்ளைப் புலிக் குட்டிகளை விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றார்கள்.

டைகன் என்ற விலங்கியல் பூங்காவில் உள்ள பெங்கால் வெள்ளைப் புலி கடந்த சில தினங்களுக்கு முன் 3 குட்டிகளை ஈன்றது.

இரண்டு ஆண் குட்டிகளும், ஒரு பெண் குட்டியும் பிறந்துள்ள நிலையில் தாய்ப்புலி நன்றாக இருப்பதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீல நிறக் கண்களுடன் காணப்படும் இந்தப் புலிக்குட்டிகள் தற்போது பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கிரீமிய விலங்கியல் பூங்காவில் நீண்ட நாட்களுக்குப் பின் வெள்ளைப் புலிக்குட்டிகள் பிறந்துள்ளதால் டைகன் விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் அதனைக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net