மஹிந்த பிரதமராக பதவி ஏற்றது சட்டவிரோதமானது!

மஹிந்த பிரதமராக பதவி ஏற்றது சட்டவிரோதமானது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை சட்டவிரோதமானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் கணக்கில் மங்கள சமரவீர சற்றுமுன்னர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த பதவிப் பிரமாணம் அரசியல் சாசனத்திற்கும் சட்டத்திற்கும் முரணானது என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 6441 Mukadu · All rights reserved · designed by Speed IT net