வெளிநாட்டில் சாதனை படைத்த ஏழைச் சிறுமிக்கு கிடைத்த அதிஷ்டம்!
ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மாணவி பாரமிக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவால் நேற்றைய தினம் காசோலை வழங்கப்பட்டது.
கடலோர கிராமமான அம்பகந்தவில பகுதியில் பாரமியின் குடும்பத்தார் ஏழ்மையில் வசிப்பதால், அங்கேயே பாரமிக்காக வீடு கட்டுவதற்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.
கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் சிறுமி பாரமி வசந்தி மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.