ஹரிகரனிடம் 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்!

ஹரிகரனிடம் 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்!

நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூன் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

தன் மீது பாலியல் புகார் கூறியதற்காகவே இந்த மானநஷ்ட வழக்கை அவர் தொடுத்துள்ளார்.

பெங்களூர் நகர் சிவில் நீதிமன்றில் அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன் படத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.

ஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார்.

“நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால் வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றஞ்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக இவ்வழக்கு போடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net