ஜமால் கஷோக்கி கொலையை உறுதிப்படுத்தும் ஒலி நாடா !

ஜமால் கஷோக்கி கொலையை உறுதிப்படுத்தும் ஒலி நாடா !

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை தொடர்பான ஒலி நாடாக்களை CIA பணிப்பாளர் கினா ஹஸ்பெல் செவிமடுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் துருக்கிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த கினா ஹெஸ்பல் குறித்த ஒலிநாடாவை செவிமடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த இரண்டாம் திகதி துருக்கியின் இஸ்தான்புலுள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஜமால் கஷோக்கி தூதரகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டதை சவுதி அரேபிய அரசாங்கம் மறுத்துள்ளது.

இதேவேளை, துருக்கியின் கைவசமிருக்கும் ஒலிநாடாவானது எவ்வாறு, எங்கு கிடைக்கப்பெற்றது என்பது பற்றிய தகவல்கள் புதிராகவே உள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Copyright © 4489 Mukadu · All rights reserved · designed by Speed IT net