மகிந்த வெட்கப்பட வேண்டும்!

மகிந்த வெட்கப்பட வேண்டும்!

ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு அமைச்சர் மகிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமைச்சரவையில் இருப்பவர்கள் பற்றி அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை இல்லாமல் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு மகிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்.

அமைச்சரவையில் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளவர்கள் இருப்பதாக கூறியிள்ளது ஒரு பாரதூரமான விடயம். இது தொடர்பில் மஹிந்த அமரவீர ஆதரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் அறிவிக்க வேண்டும்.

நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் வைத்திருக்க மாட்டார்கள் என்பதையே முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

ஆனால் தான் இருக்கும் அமைச்சரவையில் இருப்பவர்கள் பற்றி நம்பிக்கை இல்லாமல் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4462 Mukadu · All rights reserved · designed by Speed IT net