ஆப்பிள் மேக்கிங் நிகழ்வில் வெளியாகும் புதிய சாதனங்கள்!

ஆப்பிள் மேக்கிங் நிகழ்வில் வெளியாகும் புதிய சாதனங்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது மிகப் பெரும் நிகழ்வு இம்மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 2018ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த மிகப்பெரும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்வு இம்மாதம் 30ம் திகதி நடைபெற இருக்கின்றது. இதன் இரண்டாவது விழா நியூ யோர்க் நகரின் புரூக்லின் அகாடமியில் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 போன்ற பல வடிவங்களை அறிமுகம் செய்தது.

இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஏற்பாடு செய்திருக்கும் புதிய விழாவின் தீம் ‘மேக்கிங்‘ என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தவிழாவில் ஆப்பிள் நிறுவனம் தொழில் செய்வோருக்கு ஏற்ற புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி போன்றவற்றை அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐபேட் ப்ரோ வடிவில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம், யு.எஸ்.பி. டைப்சி கனெக்டர் போன்றவை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

இந்த சாதனத்துடன் விலை குறைந்த மேக்புக் மற்றும் புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேக் மினி 2014ஆம் ஆண்டிலிருந்து அப்டேட் செய்யப்படவில்லை.

அத்துடன் வேகமான இன்டெல் பிராசஸர்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஐமேக், ஐமேக் ப்ரோ மற்றும் 12இன்ச் மேக்புக் போன்றவை அறிமுகமாகலாம் என கூறப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net