ஜமால் கஷோக்கி கொலை விசாரணையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேர்மையாக செயற்படவில்லை!

ஜமால் கஷோக்கி கொலை விசாரணையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேர்மையாக செயற்படவில்லை!

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையை விசாரிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்மையாகவும், அக்கறையுடனும் செயல்படவில்லை என்று கஷோக்ஜியின் துருக்கி காதலி ஹெட்டீஸ் செங்கிஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.

தன்னை வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு விடுத்த அழைப்பையும் அவர் நிராகரித்துள்ளார்.

தன்னை பற்றி நல்ல நிலைப்பாட்டை தோற்றுவிப்பதற்காகவே ஜனாதிபதி ட்ரம்ப், தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பதாக ஹெட்டீஸ் செங்கிஸ் தெரிவித்துள்ளார்.

ஜமால் கஷோக்கி 3 வாரங்களுக்கு முன்னர் துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டார் .

சவுதி அரேபியாவை ஆட்சி செய்யும் அரச குடும்பத்திற்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ள அந்த நாடு, கூலிப்படை ஒன்றே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஊடகவியலாளர் கொல்லப்பட்டதை சவுதி அரேபியா ஆரம்பத்தில் மறுத்திருந்த நிலையில், அந்த நாட்டின் அரசு வழக்கறிஞர் இதுவொரு திட்டமிடப்பட்ட கொலை என்று நேற்று கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net