ஜோதிகாவிடம் காதலை தெரிவிக்கும் யோகிபாபு!

ஜோதிகாவிடம் காதலை தெரிவிக்கும் யோகிபாபு!

‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவிடம் காதலைக் கூறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

‘மொழி’ படத்திற்குப் பிறகு ராதாமோகன், ஜோதிகா கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’.

துமாரி சுலு படத்தின் ரீமேக்கான இப்படம் அடுத்தமாதம் வெளியாக இருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்ததிரைப்படத்தில் ‘ஆர்ஜேவான’ (RJ) ஜோதிகாவிற்கு பலரும் தொலைபேசியின் மூலம் அழைத்து அவரவர்களுடைய காதலைப் பற்றி பேசுகின்றார்கள்.

இந்தநிலையில் யோகி பாபுவும் தன்னுடைய காதலைப்பற்றியும் ஜோதிகாவிடம் பேசுகின்றார்.

ஜோதிகா யோகி பாபுவுக்க காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும்படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் யோகிபாபு ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்ததாக அமைந்திருக்கும் என்றும் இந்த காட்சிகள் அனைத்தும் அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு.

இந்நிலையில், அவர் ஜோதிகாவுடன் காற்றின் மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4731 Mukadu · All rights reserved · designed by Speed IT net